சபரிமலையில் 15 நாள்களில் 12.48 லட்சம் பக்தர்கள் தரிசனம்!

Estimated read time 1 min read

சபரிமலை ஐயப்பன் கோயிலில் மண்டல-மகரவிளக்கு பூஜைக்கான காலத்தின் முதல் 15 நாள்களில், 12.48 லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்துள்ளதாக திருவிதாங்கூர் தேவசம் போர்டு (TDB) தெரிவித்துள்ளது.

இதுதொடர்பாக வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், நவம்பர் 16-ஆம் தேதி மண்டல-மகரவிளக்கு கால பூஜை தொடங்கியதிலிருந்து நேற்று வரை, சபரிமலையில் மொத்தம் 12,47,954 பக்தர்கள் வழிபாடு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நேற்று மட்டும் மாலை 7 மணி நிலவரப்படி 50,264 பக்தர்கள் சபரிமலைக்கு வந்துள்ளனர். கடந்த சில நாள்களாக பக்தர்கள் கூட்டம் கட்டுக்குள் இருப்பதாகவும், இதனால் பக்தர்கள் எவ்வித சிரமமும் இன்றி சுவாமி தரிசனம் செய்து வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author