சென்னையில் பறவைக் காய்ச்சல் உறுதி: காகங்கள் உயிரிழப்பு குறித்து கால்நடைத் துறை எச்சரிக்கை  

Estimated read time 1 min read

சென்னை அடையாறு பகுதியில் கடந்த ஜனவரி மாதம் மர்மமான முறையில் உயிரிழந்த காகங்களின் உடல்களை ஆய்வு செய்ததில், அவற்றில் H5N1 வகை பறவைக் காய்ச்சல் வைரஸ் தொற்று இருப்பது தற்போது உறுதி செய்யப்பட்டுள்ளது.
கால்நடை பராமரிப்புத் துறை இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து, சென்னை முழுவதும் கண்காணிப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
பறவைக் காய்ச்சல் பரவுவதைத் தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் மாவட்ட நிர்வாகம் மற்றும் கால்நடைத் துறை சில முக்கிய உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
அதன்படி, சாலைகளிலோ அல்லது குடியிருப்புப் பகுதிகளிலோ பறவைகள் செத்துக் கிடந்தால், பொதுமக்கள் அவற்றை எக்காரணம் கொண்டும் வெறும் கையால் தொடக் கூடாது.

You May Also Like

More From Author