யூடியூப் தளத்தில் வெளியாகும் வீடியோக்கள் மற்றும் ஷார்ட்ஸ் மூலம் வருமானம் ஈட்டுவதற்கான தகுதி வரம்புகளை இருமடங்காக உயர்த்தி, புதிய படைப்பாளிகளுக்கு கடுமையான கட்டுப்பாடுகளை கூகுள் நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
யூடியூப் பார்ட்னர் திட்டத்தில் இணைந்து விளம்பரங்கள் மூலம் பணம் சம்பாதிக்க விரும்பும் புதிய கிரியேட்டர்கள், இனி கடந்த ஓராண்டில் 8,000 பார்வையாளர் மணிநேரங்கள் அல்லது கடந்த 90 நாட்களில் 2 கோடி (20 Million) ஷார்ட்ஸ் பார்வைகளை பெற்றிருக்க வேண்டும்.
இதற்கு முன்பு 4,000 மணிநேரம் lஅல்லது 1 கோடி பார்வைகள் மட்டுமே தேவையான தகுதியாக இருந்த நிலையில், இந்த புதிய விதிகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
யூடியூப் புதிய வருமான விதிகள்: கிரியேட்டர்களுக்கான தகுதி வரம்புகள் இருமடங்கு உயர்வு
