நடன இயக்குநராக தொடங்கி, தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராகவும் இயக்குநராகவும் வலம் வரும் ராகவா லாரன்ஸ், கடந்த சில நாட்களாக தனது அரசியல் வருகை மற்றும் திருச்சி கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் போட்டி குறித்த பல்வேறு விவாதங்களில் சிக்கியிருந்தார்.
குறிப்பாக, சமீபத்திய பத்திரிகையாளர் சந்திப்பில் அவர் ‘நாய்’ மற்றும் ‘புதிய வீடு’ என்பதை உதாரணமாக கூறி பேசிய கருத்துக்கள் சமூக வலைத்தளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தின.
இந்த நிலையில், தம்மீதான விமர்சனங்களுக்கும், உள்குத்து அரசியல் யூகங்களுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ராகவா லாரன்ஸ் தனது சமூக வலைத்தள பக்கத்தில் ஒரு நீண்ட விளக்க வீடியோவை வெளியிட்டு, தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வுகளைத் தெளிவுபடுத்தியுள்ளார்.
திருச்சி கிழக்கில் போட்டியா? நீண்ட வீடியோ வெளியிட்ட ராகவா லாரன்ஸ்!
