மின்சார வாகன உற்பத்தியாளரான டெஸ்லா, தனது முழு செல்ஃப் -டிரைவிங்(FSD) தொழில்நுட்பத்தை சீனாவில் அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது.
வாகனத் துறை வல்லுனர்களின் சந்தேகங்கள் இருந்தபோதிலும், டெஸ்லா அதன் FSD தொழில்நுட்பத்தில் நம்பிக்கையுடன் உள்ளது.
இந்த முழு செல்ஃப் -டிரைவிங் அமைப்பு ஏற்கனவே அமெரிக்காவில் அறிமுகமாகி, உலகளவில் உள்ள மக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
டெஸ்லாவின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க், ஒரு சமூக ஊடக உரையாடலின் போது சீனாவில் FSD இன் உடனடி அறிமுகம் குறித்து பேசினார். ஆனால் அப்போது அவர் அது அறிமுகமாகும் தேதியைக் குறிப்பிடவில்லை.