மாநிலத்தில் போதைப் பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தலை ஒழிப்பதில் சிறந்து விளங்கிய காவல் அதிகாரிகள் மற்றும் காவல் ஆளிநர்களுக்கு, “போதைப்பொருள் உற்பத்தி மற்றும் சட்ட விரோத கடத்தல் ஒழிப்பு சிறப்பு பணிக்கான முதல்-அமைச்சரின் காவல் பதக்கம்” 2023-ம் ஆண்டு முதல் வழங்கப்பட்டு வருகிறது. இதன் அடிப்படையில், 2026-ம் ஆண்டிற்கான பதக்கங்களை கீழ்கண்ட காவல் அதிகாரிகளுக்கு வழங்க முதல்-அமைச்சர் விஜய் உத்தரவிட்டுள்ளார்.
அதன் விபரம் பின்வருமாறு;
1.கடலூர் எஸ்பி- விவேகானந்தா சுக்லா
2.ராமநாதபுரம் எஸ்பி- சந்தீஷ்
3.சென்னை கூடுதல் எஸ்பி- ஸ்ரீலட்சுமணன்
4.சென்னை உதவி கமிஷனர்- மனோஜ் குமார்
5.திருச்சி இன்ஸ்பெக்டர்- கண்ணன்
6.கோவை இன்ஸ்பெக்டர்- காமராஜ்
7.குரங்கணி எஸ்ஐ- அருண்
8.குமுளி ஏட்டு- ராஜ்குமார்
9.நாகை வேட்டைக்காரனிருப்பு ஏட்டு- கார்த்திகேயன்
10.கோட்டைப்பட்டினம் ஏட்டு- குத்புதீன்
11.நல்லூர் சிறப்பு எஸ்ஐ- ராமர்
12.நெல்லை மதுவிலக்கு ஏட்டு- ஐயப்பன்
13.சென்னை ஆர்.3,அசோக் நகர் ஏட்டு- பிரேம் குமார்
14.கரூர் சிறப்பு எஸ்ஐ – செந்தில்குமார்
15.தேனி ஏட்டு- ராமகிருஷ்ணன்
#JustNow || போதை பொருள் ஒழிப்பில் சிறந்து விளங்கிய காவல்துறையினருக்கு முதலமைச்சர் பதக்கம் – தமிழ்நாடு அரசு அறிவிப்பு#CMVijay | #Police | #Medal | #TNGovt | #PolimerNewws pic.twitter.com/2cV9Yw53ZM
— Polimer News (@polimernews) June 26, 2026
