சீன வணிக அமைச்சகத்தின் செய்தித் தொடர்பாளர் நவம்பர் 19ஆம் நாள் கூறுகையில், நெக்ஸ்பீரியா நிறுவனத்துடன் தொடர்புடைய பிரச்சினை குறித்து சீன-நெதர்லாந்து அரசு வாரியங்கள் நவம்பர் 18,19 ஆகிய நாட்களில் பெய்ஜிங்கில் கலந்தாய்வு நடத்தின. நெதர்லாந்தின் பொருளாதார அமைச்சர் பிறப்பித்த நிர்வாக கட்டளை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக நெதர்லாந்து தரப்பு முன்முயற்சியுடன் முன்வைத்துள்ளது. இதற்கு சீனா வரவேற்பு தெரிவித்ததாக கூறினார்.
அவர் மேலும் கூறுகையில், நெதர்லாந்து பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொண்டு, இப்பிரச்சினையை வெகுவிரைவில் தீர்ப்பதை முன்னேற்று, உலகளாவிய அரை மின் கடத்தி தொழில் சங்கிலியின் பாதுகாப்பு மற்றும் நிலைத்தன்மையை மீட்டெடுக்க வேண்டும் என சீனா இக்கலந்தாய்வில் வலியுறுத்தியதாக தெரிவித்தார்.
மேலும், நெதர்லாந்தின் பொருளாதார அமைச்சகம் அழுத்தம் கொடுத்ததால், அந்நாட்டின் நிறுவன நீதிமன்றம், நெக்ஸ்பீரியா நிறுவனத்தின் மீதான சீன விங்டெக் நிறுவனத்தின் கட்டுப்பாட்டு உரிமையை பறித்துள்ளதாக தீர்ப்பளித்தது. இத்தவறான தீர்ப்பு, இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான முக்கிய தடையாகும். இந்நிலையில், நெதர்லாந்து இப்பிரச்சினையைத் தீர்ப்பதற்கான பயனுள்ள தீர்ப்பு வழிமுறையை முன்வைக்க வேண்டும் என்றும் சீனா தெரிவித்துள்ளதாக அவர் கூறினார்.
