கடந்த ஆண்டு உலகளாவிய வெப்ப பதிவுகள் வரலாறு காணாத அளவு இருந்தது என்று ஐநா இன்று தெரிவித்துள்ளது.
2014 முதல் 2023 வரையிலான காலகட்டம் தான் இதுவரை பதிவானதிலேயே அதிக வெப்பமான தசாப்தம் என்று ஐநா கூறியுள்ளது.
மேலும், இதனால், இதுவரை இல்லாத அளவு பனிப்பாறைகள் உருகி பெருங்கடல்களின் நீர்மட்டம் உயர்நதுள்ளது.
ஐக்கிய நாடுகள் சபையின் உலக வானிலை அமைப்பு அதன் வருடாந்திர காலநிலை அறிக்கையை வெளியிட்டுள்ளது.
இதுவரை பதிவு செய்யப்பட்டதிலேயே அதிக வெப்பம் 2023ஆம் ஆண்டில் தான் பதிவு செய்யப்பட்டது என்று அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.