தாலிபான் ஆட்சி செய்யும் ஆப்கானிஸ்தான், குனார் ஆற்றில் அணைகள் கட்டி பாகிஸ்தானுக்கு நீர் வருவதை தடுக்க திட்டமிட்டுள்ளது.
இந்த உத்தரவை தாலிபான் உச்ச தலைவர் மவ்லவி ஹிபதுல்லா அகுண்ட்சாடா பிறப்பித்துள்ளார்.
நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்ட ஆப்கானிஸ்தானுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையிலான சமீபத்திய மோதல்களுக்கு பிறகு இந்த அறிவிப்பு வந்துள்ளது.
அணை கட்டுமானத்தை “விரைவில்” தொடங்குமாறு ஆப்கானிஸ்தான் நீர் மற்றும் எரிசக்தி அமைச்சகத்திற்கு உத்தரவிடப்பட்டுள்ளது.
இந்தியாவை தொடர்ந்து, பாகிஸ்தானுக்கு தண்ணீரை தடுக்கும் அணைகள் கட்டும் ஆப்கானிஸ்தான்
