இந்தியாவின் 77 வது குடியரசு தினத்தை முன்னிட்டு, டெல்லி கர்தவ்யா பாதையில் நடைபெற்ற விழாவில் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு தேசியக் கொடியை ஏற்றி வைத்தார்.
தேசிய கீதம் இசைக்கப்பட்ட வேளையில், உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 105 மி.மீ லைட் ஃபீல்ட் துப்பாக்கிகள் மூலம் 21 குண்டுகள் முழங்க தேசத்திற்கு மரியாதை செலுத்தப்பட்டது.
இந்த ஆண்டு விழாவில் ஒரு முக்கிய நிகழ்வாக, 40 ஆண்டுகளுக்கு முன்பு நிறுத்தப்பட்ட ஒரு பாரம்பரியம் மீண்டும் உயிர் பெற்றது.
குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு மற்றும் சிறப்பு விருந்தினர்களான ஐரோப்பிய ஒன்றியத் தலைவர்கள் ஆகியோர், ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர்கள் புடைசூழ, அரச கம்பீரத்துடன் பாரம்பரிய சாரட் வண்டியில் அணிவகுப்பு நடைபெறும் இடத்திற்கு வந்தடைந்தனர்.
77-வது குடியரசு தினம்: தேசியக் கொடியை ஏற்றி வைத்தார் குடியரசுத் தலைவர் முர்மு
