வருமான வரி விதிகள் 2026: மெட்ரோ நகரங்களில் HRA சலுகை அதிகரிப்பு  

Estimated read time 1 min read

மத்திய அரசு வெளியிட்டுள்ள ‘வரைவு வருமான வரி விதிகள் 2026’-ன் படி, பழைய வரி முறையை பின்பற்றும் அரசு மற்றும் தனியார் துறை ஊழியர்களுக்கு ஒரு முக்கிய சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, வளர்ந்து வரும் முக்கிய பொருளாதார மையங்களான பெங்களூரு, ஐதராபாத், புனே மற்றும் அகமதாபாத் ஆகிய நகரங்களில் வசிக்கும் ஊழியர்கள் இனி கூடுதல் வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) வரி விலக்கை பெற முடியும்.
தற்போது நடைமுறையில் உள்ள விதிகளின்படி, சென்னை, டெல்லி, கொல்கத்தா மற்றும் மும்பை ஆகிய நான்கு நகரங்கள் மட்டுமே ‘மெட்ரோ’ நகரங்களாக கருதப்படுகின்றன.
இங்கு வசிப்பவர்கள் தங்களின் அடிப்படை சம்பளத்தில் 50 சதவீதம் வரை HRA வரி விலக்காக கோர முடியும்.

You May Also Like

More From Author