இந்தியாவின் முன்னாள் துணைத் தலைவரான ஜகதீப் தன்கர் (75), புதுடெல்லியில் உள்ளஎய்ம்ஸ் – மருத்துவமனையின் இதயம் மற்றும் நரம்பியல் சிறப்பு மையத்தில் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. இன்ட்ரது அதிகாலை தனது இல்லத்தின் அருகே வழக்கமான காலை நடைப்பயிற்சியில் ஈடுபட்டிருந்தபோது, அவர் எதிர்பாராதவிதமாக நிலைகுலைந்து திடீரென மயங்கி கீழே விழுந்துள்ளார்.
அங்குப் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த பாதுகாப்புப் படையினர் உடனடியாக அவரை மீட்டு, முதலில் பிசிஆர் வாகனம் மூலம் அவரது இல்லத்திற்கு அழைத்துச் சென்றனர். அங்குச் சில நிமிடங்கள் அவர் முழுமையான மயக்க நிலையில் இருந்ததாகத் தெரிகிறது. அதனைத் தொடர்ந்து அவரது உடல்நிலை மேலும் சிக்கலடைந்ததால், கல்லீரல் மற்றும் பித்த நரம்பியல் அறிவியல் நிறுவனத்தின் மருத்துவக் குழுவினரும், எய்ம்ஸ் மருத்துவமனையின் மூத்த இதயவியல் நிபுணர் டாக்டர் சந்தீப் சேத் தலைமையிலான குழுவினரும் அவரது இல்லத்திற்கு விரைந்து வந்து அவசரப் பரிசோதனைகளை மேற்கொண்டனர்.
STORY | Former VP Dhankhar collapses during morning walk, admitted to AIIMS
Former vice president Jagdeep Dhankhar was admitted to AIIMS here after he fell unconscious during his morning walk on Wednesday, sources said.
READ: https://t.co/EfPlWBREsc https://t.co/e28iSu1dbB
— Press Trust of India (@PTI_News) November 11, 2026
மருத்துவர்களின் தீவிர ஆலோசனையைத் தொடர்ந்து, உடனடியாக ஆம்புலன்ஸ் மூலம் அவர் எய்ம்ஸ் மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு இதயவியல் பிரிவில் சேர்க்கப்பட்டார். 75 வயதான ஜகதீப் தன்கருக்கு எய்ம்ஸ் மருத்துவமனையின் சிறப்பு மருத்துவர்கள் அடங்கிய குழு தீவிர சிகிச்சை அளித்து வருகிறது. இருப்பினும், அவரது தற்போதைய உடல்நிலை மற்றும் மயக்கத்திற்கான காரணம் குறித்த விரிவான தகவல்களையோ அல்லது அதிகாரப்பூர்வ மருத்துவ அறிக்கையையோ எய்ம்ஸ் நிர்வாகம் இதுவரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவில்லை.
கடந்த 2022-ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் 14-வது துணைத் தலைவராகப் பொறுப்பேற்ற ஜகதீப் தன்கர், 2025 ஜூலை மாதம் வரை அப்பதவியில் நீடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக, கடந்த 2025-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திலும் லேசான மயக்கம் மற்றும் மூச்சுத்திணறல் காரணமாக எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, அவருக்கு ‘ஸ்டென்ட்’ அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்யப்பட்டது. தற்போது மீண்டும் அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதால், அரசியல் தலைவர்களும் ஆதரவாளர்களும் அவர் விரைவில் குணமடையப் பிரார்த்தித்து வருகின்றனர்.
