ஈரான் மற்றும் அமெரிக்கா இடையிலான உறவில் முன்னெப்போதும் இல்லாத வகையில் விரிசல் ஏற்பட்டுள்ள சூழலில், ஈரானின் உயர்மட்ட தலைவர் அயதுல்லா அலி கமேனி அமெரிக்காவுக்கு பகிரங்க எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அமெரிக்கா ஈரான் மீது ராணுவத் தாக்குதலை தொடங்கினால், அது ஒரு “பிராந்திய போராக” மாறும் என்று அவர் கூறியுள்ளார்.
ஈரான் நாட்டின் நிறுவனர் ருஹொல்லா கொமேனியின் நினைவிடத்திற்கு சென்றிருந்த கமேனி, அங்கு ஆற்றிய உரையில் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் ராணுவ மிரட்டல்களை கடுமையாகச் சாடினார்.
“அமெரிக்கர்கள் ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும்; அவர்கள் ஒரு போரைத் தொடங்கினால், இம்முறை அது ஒட்டுமொத்த மத்திய கிழக்கையும் பாதிக்கும் பிராந்தியப் போராக அமையும். அமெரிக்காவின் போர்க்கப்பல்களைக் கண்டு ஈரானிய மக்கள் ஒருபோதும் அஞ்சமாட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.
