2026 டி20 உலகக் கோப்பை தொடரில் விளையாடி வரும் இந்திய அணியின் அதிரடி தொடக்க வீரர் அபிஷேக் சர்மா, கடுமையான வயிற்று தொற்று காரணமாக டெல்லியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதனால் பிப்ரவரி 12-ஆம் தேதி நமீபியாவுக்கு எதிராக நடைபெறவுள்ள இந்தியாவின் இரண்டாவது லீக் போட்டியில் அவர் விளையாடுவது பெரும் சந்தேகமாகியுள்ளது.
அமெரிக்காவுக்கு எதிரான முதல் போட்டியின் போதே அபிஷேக் சர்மா உடல்நல குறைவால் பாதிக்கப்பட்டிருந்தார்.
டெல்லிக்கு வந்த பிறகு அவரது உடல்நிலை மேலும் மோசமடைந்ததால், கடந்த இரண்டு நாட்களாக அவர் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
டி20 உலகக் கோப்பை: இந்திய வீரர் அபிஷேக் சர்மா மருத்துவமனையில் அனுமதி
