மணிப்பூரின் வளர்ச்சியை விரைவுபடுத்தவும், அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சியை ஊக்குவிக்கவும், ₹7,300 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள பல வளர்ச்சித் திட்டங்களுக்குப் பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டியுள்ளார்.
பொதுக் கூட்டத்தில் உரையாற்றிய பிரதமர், மணிப்பூரை இந்தியாவின் முன்னேற்றத்திற்கு ஒரு முக்கியத் தூண் என்று அழைத்ததுடன், அதன் மக்களின் மன உறுதியைப் பாராட்டினார்.
இந்தத் திட்டங்களில், ₹3,600 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள மணிப்பூர் நகர்ப்புற சாலைகள், வடிகால் மற்றும் சொத்து மேலாண்மை மேம்பாட்டுத் திட்டம், ₹2,500 கோடிக்கும் அதிகமான மதிப்புள்ள ஐந்து தேசிய நெடுஞ்சாலைத் திட்டங்கள் மற்றும் மணிப்பூர் இன்ஃபோடெக் டெவலப்மென்ட் (MIND) திட்டம் ஆகியவை அடங்கும்.
மணிப்பூரில் ரூ.7,300 கோடி மதிப்பிலான திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி
