இந்தியா -சீனா வியூக ரீதியிலான பேச்சுவார்த்தை; உறவை மேம்படுத்த இரு நாடுகளும் இணக்கம்  

Estimated read time 1 min read

இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவில் நிலவி வரும் கசப்புணர்வை குறைத்து, அதை சீரமைக்கும் நோக்கில் இரு நாடுகளின் உயர்மட்ட அதிகாரிகளுக்கு இடையிலான ‘வியூக ரீதியிலான பேச்சுவார்த்தை’ செவ்வாயன்று புது டெல்லியில் நடைபெற்றது.
இந்திய வெளியுறவு செயலாளர் விக்ரம் மிஸ்ரி மற்றும் சீன வெளியுறவுத்துறை இணையமைச்சர் மா ஜாவோக்ஷு ஆகியோர் இதில் பங்கேற்றனர்.
இந்தப் பேச்சுவார்த்தைக்குப் பிறகு அறிக்கை வெளியிட்ட சீனா, “இந்தியாவும் சீனாவும் ஒருவருக்கொருவர் போட்டியாளர்கள் அல்ல, மாறாகக் கூட்டுப்பங்காளிகள். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் அச்சுறுத்தலாக இருக்காமல், வளர்ச்சிக்கான வாய்ப்புகளாகக் கருத வேண்டும்” எனத் தெரிவித்துள்ளது.
மேலும், 2026 மற்றும் 2027-ம் ஆண்டுகளில் முறையே இந்தியா மற்றும் சீனா பிரிக்ஸ்(BRICS) கூட்டமைப்பிற்கு தலைமை தாங்குவதற்குப் பரஸ்பரம் ஆதரவளிக்க இரு நாடுகளும் சம்மதித்துள்ளன.

You May Also Like

More From Author