நாங்கள் சேவகர்கள் அல்ல.. சமமாக நடத்துங்கள்! டிரம்ப்-க்கு ராகுல் காந்தி காட்டமான பதிலடி  

Estimated read time 0 min read

நாடாளுமன்ற மக்களவையில் குடியரசு தலைவர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானத்தின் மீது பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்தியா மற்றும் அமெரிக்கா இடையே அண்மையில் கையெழுத்தான வர்த்தக ஒப்பந்தம் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார்.
பிரதமர் மோடி தலைமையிலான அரசு அமெரிக்காவிடம் சரணடைந்துவிட்டதாக குற்றம் சாட்டிய ராகுல் காந்தி,”அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்தியாவிடம் ஒரு கூட்டாளியாக பேச வேண்டுமே தவிர, எஜமானர் தனது சேவகர்களிடம் பேசுவது போலப் பேசக்கூடாது. இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பு மற்றும் விவசாயிகளின் நலன்களை நாங்கள் எக்காரணம் கொண்டும் விட்டுக் கொடுக்க மாட்டோம். நமது தேசத்தின் கௌரவத்தையும், இறையாண்மையையும் பாதுகாப்பதில் எந்த சமரசமும் செய்யப்படாது” என்று ஆவேசமாகப் பேசினார்.

You May Also Like

More From Author