ஐ.நா பேரவை 5ம் நாள் எடுத்த முடிவின்படி, பாலஸ்தீனப் பிரச்சினையின் அமைதியான தீர்வு, இரு நாடுகள் தீர்வு திட்டத்தின் நடைமுறையாக்கம் ஆகியவற்றுக்கான உயர்நிலை சர்வதேச கூட்டம் செப்டம்பர் 22ம் நாள் அதாவது ஐ.நா பேரவையின் உயர்நிலை நடவடிக்கைகளின் வார காலத்தில் மீண்டும் நடைபெறவுள்ளது என்று தெரிவிக்கப்பட்டது.
பிரான்ஸ், சௌதி அரேபியா ஆகியவை கூட்டாக ஏற்பாடு செய்த, பாலஸ்தீனப் பிரச்சினையின் அமைதியான தீர்வு, இரு நாடுகள் தீர்வு திட்டத்தின் நடைமுறையாக்கம் ஆகியவற்றுக்கான உயர்நிலை சர்வதேச கூட்டம், நியூயார்கிலுள்ள ஐ.நா தலைமையகத்தில் ஜுலை 28ம் நாள் முதல் 30ம் நாள் வரை, நடைபெற்றது. செப்டம்பரில் ஐ.நா பேரவையின் உயர்நிலை நடவடிக்கைகளின் வாரத்தில், பாலஸ்தீன நாட்டை ஏற்றுக்கொள்ளும் விருப்பத்தை அறிவிக்கும் என்று பிரான்ஸ் உள்ளிட்ட பல நாடுகள் இக்கூட்டத்தில் தெரிவித்துள்ளன.