சுங்க வரி குறித்து சீனாவுடன் பேச்சுவார்த்தை நடத்த விருப்பம் தெரிவித்து அமெரிக்க அரசின் உயர் நிலை அதிகாரிகள் தொடர்ந்து கருத்துக்களை தெரிவித்துள்ளதை சீனா கவனித்து வருவதாகவும், அமெரிக்காவுடனான வர்த்தகப் பேச்சுவார்த்தைகளை மதிப்பீடு செய்து வருவதாகவும் சீன வணிக அமைச்சகம் மே 2ஆம் நாள் தெரிவித்துள்ளது.
மேலும் இது குறித்து சீன வணிக அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தவறான ஒருதரப்பு சுங்க வரி விதித்தல் நடவடிக்கைகளை நிறுத்தவில்லை என்றால், அமெரிக்காவிடம் நேர்மை இல்லை என்பதை காட்டும், மேலும், ஒன்றுக்கொன்று நம்பிக்கையை குறைக்கும் என்றும் தெரிவித்தார்.