ரஷ்யாவில் வாட்ஸ்அப் மற்றும் டெலிகிராம் முடக்கம்; பின்னணி என்ன?  

Estimated read time 1 min read

ரஷ்யாவில் மிகவும் பிரபலமான மெசேஜிங் செயலியான வாட்ஸ்அப்-ஐ முழுமையாக முடக்கும் நடவடிக்கையில் அந்த நாட்டு அரசு இறங்கியுள்ளது.
இதேபோல், மற்றொரு முன்னணி செயலியான டெலிகிராம் சேவையிலும் அந்நாட்டு தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையமான ‘ரோஸ்கோம்நாட்சோர்’ (Roskomnadzor) கடும் கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.
ரஷ்ய சட்டங்களுக்கு புறம்பான தகவல்களை நீக்க மறுப்பது மற்றும் பயங்கரவாதம் தொடர்பான வழக்குகளில் பாதுகாப்பு அமைப்புகளுக்குத் தேவையான தகவல்களை பகிர மறுப்பது ஆகிய காரணங்களால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக, வெளிநாட்டுச் செயலிகள் மூலம் மேற்கொள்ளப்படும் ‘என்கிரிப்ட்’ (Encrypted) செய்யப்பட்ட அழைப்புகளை கட்டுப்படுத்த ரஷ்யாவின் நடவடிக்கையாக இது பார்க்கப்படுகிறது.

You May Also Like

More From Author