தைப்பொங்கல் திருநாளை கொண்டாடும் வகையில், வரும் ஜனவரி 15-ஆம் தேதி திரையரங்குகளில் பல்வேறு நட்சத்திரங்களின் திரைப்படங்கள் வெளியாக உள்ளன.
பெரிய பட்ஜெட் படங்கள் மட்டுமின்றி, நீண்ட நாட்களாகக் காத்திருந்த திரைப்படங்களும் இந்த பொங்கல் ரேசில் இணைந்துள்ளன.
நடிகர் கார்த்தி நடிப்பில், நலன் குமாரசாமி இயக்கத்தில் உருவாகியுள்ள ‘வா வாத்தியார்’ திரைப்படம் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகிறது.
இதில் கீர்த்தி ஷெட்டி கதாநாயகியாக நடித்துள்ளார்.
அதேபோல், நடிகர் ஜீவா நடிப்பில் நிதிஷ் சகாதேவ் இயக்கியுள்ள ‘தலைவர் தம்பி தலைமையில்’ என்ற ஆக்ஷன்-காமெடி திரைப்படம் குடும்ப ரசிகர்களை கவரும் வகையில் பொங்கலன்று திரைக்கு வருகிறது.
2026 பொங்கல் ரிலீஸ்: திரையரங்குகளில் வெளியாகவுள்ள தமிழ்த் திரைப்படங்கள்
