ஏஐ மனநலத்தைப் பாதிக்குமா? AI Psychosis என்றால் என்ன? நிபுணர்கள் எச்சரிக்கை  

Estimated read time 1 min read

செயற்கை நுண்ணறிவு (ஏஐ) சாட்பாட்களுடன் நீண்ட நேரம் பேசுவது மனித மனநிலையில் மாற்றத்தை ஏற்படுத்துமா என்ற கேள்வி இப்போது உலகளவில் விவாதமாக மாறியுள்ளது.
‘ஏஐ சைக்கோசிஸ்’ (AI Psychosis) என்பது ஒரு அதிகாரப்பூர்வ மருத்துவக் கண்டறிதல் இல்லை என்றாலும், ஏஐ கருவிகளுடன் அதிக நேரம் உரையாடுவதால் நிஜ உலகிற்கும் கற்பனைக்கும் இடையிலான வேறுபாட்டைப் பிரித்தறிய முடியாமல் போவதை இது குறிக்கிறது.
இதனால் தனிமை, மனப் பிரமைகள் மற்றும் அதீத பயம் போன்றவை ஏற்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

You May Also Like

More From Author