இந்திய ரிசர்வ் வங்கி (ஆர்பிஐ) வெளியிட்டுள்ள சமீபத்திய அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, ஜூலை 17 ஆம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில் இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு 1.08 பில்லியன் டாலர் அதிகரித்து மொத்தம் 676.237 பில்லியன் டாலரை எட்டியுள்ளது.
இதற்கு முந்தைய வர்த்தக வாரத்தில் நாட்டின் கையிருப்பு 964 மில்லியன் டாலர் உயர்ந்து 675.157 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
தொடர்ச்சியாக நாட்டின் அந்நியச் செலாவணி கையிருப்பு அதிகரித்து வருவது தற்போதைய நிதி நிலைமைக்கும், சர்வதேச அளவில் இந்திய ரூபாயின் மதிப்பைப் பாதுகாக்கவும் மிகப்பெரிய பலமாகப் பார்க்கப்படுகிறது.
இந்தியாவின் அந்நியச் செலாவணி கையிருப்பு $676.23 பில்லியனாக உயர்வு: ரிசர்வ் வங்கி அறிக்கை
