ககன்யான் திட்ட பாராசூட் சோதனை வெற்றிகரமாக பரிசோதனை!

Estimated read time 1 min read

ககன்யான் திட்டத்தில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக தரையிறக்கும் பாராசூட் சோதனை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

இஸ்ரோவின் கனவு திட்டமான மனிதர்களை விண்வெளிக்கு அழைத்துச் செல்லும் ககன்யான் திட்டத்திற்கான பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன.

இதற்காக பல்வேறு கட்ட சோதனைகளை இஸ்ரோ மேற்கொண்டு வருகிறது. அந்த வகையில் விண்வெளி வீரர்களை பாதுகாப்பாக பூமிக்கு தரை இறக்கும் பாராசூட் சோதனை சண்டிகரில் வெற்றிகரமாக நடத்தப்பட்டது.

விண்கலம் பூமிக்கு திரும்பும்போது அதன் வேகத்தை பாதுகாப்பாக குறைக்க பாராசூட் உதவும் என பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான DRDO தெரிவித்துள்ளது.

இந்த சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்திருப்பது, ககன்யான் திட்டத்தின் முக்கிய மைல்களாக பார்க்கப்படுகிறது. இந்த வெற்றிக்காக DRDO மற்றும் இஸ்ரோ விஞ்ஞானிகளுக்கு பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் வாழ்த்து தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author