சீன-அமெரிக்க வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பு

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் கமிட்டியின் அரசியல் குழு உறுப்பினரும் சீன வெளியுறவு அமைச்சருமான வாங்யீ, 13ஆம் நாள், மியுனிச் பாதுகாப்பு மாநாட்டின் போது, அமெரிக்க வெளியுறவு அமைச்சர் ரூபியோவை சந்தித்து ஆகிய இருவரும் பேச்சுவார்த்தை நடத்தினார்.

இதில் வாங்யீ கூறுகையில்,

இரு தரப்புறவு நிதானமான, சீரான மற்றும் தொடரவல்ல வளர்ச்சிப் பாதையில் நுழைவும், உலகத்திற்கு மேலும் நேர்மறையான செய்திகளை வெளியிடவும் சீனாவும் அமெரிக்காவும் கூட்டாக பாடுபட வேண்டும் என்றார்.

இப்பேச்சுவார்த்தை ஆக்கப்பூர்வமாகவும் பயனுள்ளதாகவும் விளங்குகிறது என்று இரு தரப்பினரும் ஒருமனதாக ஏற்றுக்கொண்டுள்ளனர்.

இரு நாடுகளின் அரசுத் தலைவர்களம் எட்டியுள்ள ஒத்த கருத்துக்களைக் கூட்டாக நடைமுறைப்படுத்தி, அரசியல் மற்றும் தூதாண்மை வழிமுறைகளின் மூலம் ஒருங்கிணைப்பை வலுப்படுத்தி, இரு நாடுகளின் உயர் நிலை தொடர்புகளுக்கு சீராக சேவை புரிந்து, பல்வேறு துறைகளிலான பேச்சுவார்த்தையும் ஒத்துழைப்பையும் ஆழமாக்கி, இரு தரப்புறவின் நிலையான வளர்ச்சியை விரைவுபடுத்த வேண்டும் என்று இரு தரப்பினரும் ஒருமனதாக இசைந்துள்ளனர்.

You May Also Like

More From Author