மத்திய கல்வி அமைச்சகம் 2023 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்திய APAAR (Automated Permanent Academic Account Registry) என்பது மாணவர்களுக்கான ஒரு பிரத்யேக டிஜிட்டல் அடையாள அட்டையாகும்.
இது தேசிய கல்வி கொள்கை 2020 (NEP 2020) மற்றும் தேசிய கிரெடிட் மற்றும் தகுதி கட்டமைப்பு (NCrF) ஆகியவற்றின் கீழ் கொண்டு வரப்பட்டுள்ளது.
இதனை “ஒரே தேசம், ஒரே மாணவர் அடையாள அட்டை” என்றும் அழைக்கிறார்கள். ஆதார் கார்டு போலவே, இது ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான 12 இலக்க எண்ணை வழங்கும்.
இந்த எண்ணைப் பயன்படுத்தி ஒரு மாணவரின் கல்விச் சாதனைகள், சான்றிதழ்கள் மற்றும் பிற கல்வி ஆவணங்களை ஒரே இடத்தில் டிஜிட்டல் முறையில் சேமித்து வைக்க முடியும்.
APAAR ID என்றால் என்ன? மாணவர்களுக்கான முழுமையான வழிகாட்டி
