சீனத் துணை அரசுத் தலைவர் ஹென் செங் ஜுலை 3ஆம் நாள் சிங்ஹுவா பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற 13ஆவது உலக அமைதி மன்றக் கூட்டத்தின் துவக்க விழாவில் கலந்து கொண்டு உரை நிகழ்கத்தினார்.
அவர் கூறுகையில், மனித குலத்தின் பொது எதிர்கால சமூகத்தை உருவாக்குவது குறித்து அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் முன்வைத்த முக்கிய கருத்துக்கள், உலக வளர்ச்சி முன்மொழிவு, உலகப் பாதுகாப்பு முன்மொழிவு, உலக நாகரீக முன்மொழிவு ஆகியவை, மனித குலத்தின் அமைதி மற்றும் வளர்ச்சி தொடர்பான முக்கிய பிரச்சினைகளைத் தீர்க்க உதவும் என்று தெரிவித்தார்.
மேலும் அவர் கூறுகையில், பன்னாடுகளுடன் உலக அமைதி மற்றும் செழுமையைக் கூட்டாக விரைவுபடுத்தி, மேலும் அருமையான உலகத்தை கையோடு கைகோர்த்து உருவாக்க சீனா விரும்புவதாக தெரிவித்தார். இது பற்றி அவர் ஆலோசனையையும் முன்வைத்தார்.
ஜப்பான் முன்னாள் தலைமையமைச்சர் ஹடோயாமா யூகியோ Hatoyama Yukio, பெல்ஜியத்தின் முன்னாள் தலைமையமைச்சரும், ஐரோப்பிய பேரவையின் முன்னாள் தலைவருமான வென் ரோம்பூய் Van Rompuy உள்ளிட்ட வெளிநாடுகளின் முன்னாள் தலைவர்கள், சீனாவுக்கான வெளிநாட்டுத் தூதர்கள், சீன மற்றும் வெளிநாட்டு அறிஞர்கள் என சுமார் 400 பேர் இக்கூட்டத்தில் கலந்து கொண்டனர்.