வசந்த விழா கொண்டாட்ட கலை நிகழ்ச்சிக்கான ஐ.நாவின் சிறப்பு நடவடிக்கை

Estimated read time 0 min read

சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி தொடர்பான ஐ.நா. சிறப்பு நடவடிக்கை பிப்ரவரி 13ஆம் நாள் அமெரிக்காவின் நியூயார்க்கில் நடைபெற்றது. சீன ஊடக குழுமத்தின் இயக்குநர் ஷென் ஹாய்சியோங், ஐ.நாவின் உலகளாவிய தகவல்தொடர்பு துறையின் துணைப் பொதுச்செயலாளர் மெலிசா ஃப்ளெமிங் ஆகியோர் காணொளி மூலம் உரைநிகழ்த்தினர். ஐ.நா.விற்கான பல நாடுகளின் தூதர்கள், ஐ.நா. நிறுவனங்களின் பிரதிநிதிகள், சீனா மற்றும் அமெரிக்காவின் கலாச்சார, பொருளாதார, ஊடக வட்டாரங்களைச் சேர்ந்த நண்பர்கள் உள்ளிட்ட சுமார் 300 விருந்தினர்கள் இந்நடவடிக்கையில் கலந்து கொண்டனர்.

ஷென் ஹாய்சியோங் கூறுகையில், உலகளவில் மிகப்பெரிய வருடாந்திர கலாச்சார நிகழ்வாக, சீனாவின் சிறந்த பாரம்பரிய கலாச்சாரத்தையும் புதிய யுகத்தில் சீனாவின் மாற்றத்தையும் புரிந்துகொள்ள ஒரு ஜன்னலை, சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி உலகளாவிய பார்வையாளர்களுக்கு திறக்கிறது என்றார்.

பலதரப்புவாதத்துக்கான சீன மக்களின் நீண்டகால மற்றும் உறுதியான ஆதரவிற்கு ஃப்ளெமிங் உயர் பாராட்டுகளைத் தெரிவித்தார்.

Please follow and like us:

You May Also Like

More From Author