சீனாவின் ஆட்சிமுறை பற்றிய ஷிச்சின்பிங்கின் கருத்து எனும் புத்தகத்தின் 5ஆவது தொகுதி தொடர்பான சீன-இலங்கை வாசகர்கள் மன்றக் கூட்டம் ஜூலை 3ஆம் நாள் இலங்கையின் தலைநகர் கொழும்புவில் நடைபெற்றது.
இப்புத்தகத்தின் 5ஆவது தொகுதி, புதிய யுகத்திற்கான சீனத் தனிச்சிறப்பு வாய்ந்த சோஷலிசம் பற்றிய ஷிச்சின்பிங் சிந்தனையின் புதிய சாதனைகளை முழுமையாக வெளிப்படுத்தும் அதிகாரப்பூர்வ படைப்பாகும் என்றும், சீனாவின் பாதை, ஆட்சிமுறை மற்றும் தத்துவம் பற்றி சர்வதேச சமூகம் ஆழ்ந்த புரிதலுக்கு இது துணைபுரியும் என்றும் இக்கூட்டத்தில் கலந்து கொண்ட விருந்தினர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். நவீனமயமாக்கத்திற்குச் செல்லும் பாதையில் சீனாவும் இலங்கையும் இணைந்து பயணிக்கும் நாடுகளாகும். இருநாடுகளுக்கிடையே புரிதலை அதிகரிப்பது, ஒத்த கருத்தை உருவாக்குவது, ஒத்துழைப்பை ஆழமாக்குவது, சீன-இலங்கை பொது எதிர்கால சமூகத்தை கூட்டாக கட்டமைப்பது ஆகியவற்றுக்கு நடப்பு வாசகர்கள் மன்றக்கூட்டம் முக்கியத்துவம் வாய்ந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டினர்.
மேலும், தேசிய ஆட்சிமுறை, பசுமை வளர்ச்சி, திறந்த ஒத்துழைப்பு, ஒரு மண்டலம் மற்றும் ஒரு பாதை ஒத்துழைப்பு உள்ளிட்ட தலைப்புகளின் கீழ் இருநாட்டு நிபுணர்களும் விவாதம் நடத்தினர்.
