வி.கே.சசிகலா தலைமையில் வரும் 24-ஆம் தேதி பிரமாண்ட பொதுக்கூட்டம்!

Estimated read time 1 min read

ஜெயலலிதாவின் பிறந்தநாளன்று பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் நடைபெறவுள்ள பொதுக்கூட்டத்திற்கான பந்தக்கால் நடும் நிகழ்வு நடைபெற்றது.

தமிழக அரசியலில் தனது இருப்பை உறுதிப்படுத்த தென் மாவட்டங்களை மையமாக வைத்து களமிறங்க வி.கே.சசிகலா திட்டமிட்டுள்ளார்.

அந்த வகையில், மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்தநாளான வரும் 24-ஆம் தேதி, ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் வி.கே.சசிகலா தலைமையில் பிரமாண்ட பொதுக்கூட்டம் நடைபெற உள்ளது.

இதற்கான பந்தக்கால் நடும் நிகழ்வில் சசிகலாவின் ஆதரவாளரான ஓய்வுபெற்ற ஏடிஎஸ்பி வெள்ளத்துரை உட்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

ஜெயலலிதா பிறந்தநாளில் நடைபெறும் கூட்டத்தில், சசிகலா தனது அடுத்தகட்ட அரசியல் நகர்வு குறித்த முக்கியமான அறிவிப்புகளை வெளியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

You May Also Like

More From Author