ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் – மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என கிரண் ரிஜிஜூ பேட்டி!

Estimated read time 0 min read

ஓம் பிர்லாவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் மீது மார்ச் 9ல் வாக்கெடுப்பு நடத்தப்படும் என மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜு தெரிவித்துள்ளார்.

மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் நம்பிக்கையில்லா தீர்மானத்துக்கான நோட்டீஸை வழங்கியுள்ளன.

இதுகுறித்து அருணாச்சலப் பிரதேசத்தில் செய்தியாளர்களிடம் பேசிய கிரண் ரிஜிஜு, மார்ச் 9 ஆம் தேதி மக்களவையில், சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்பட்ட நம்பிக்கையில்லா தீர்மானத்தின் மீதான விவாதத்தை நடத்துவோம் என கூறினார்.

மேலும், விவாதத்திற்குப் பிறகு வாக்கெடுப்பு நடைபெறும் என்றும் கிரண் ரிஜிஜூ தெரிவித்தார்.

You May Also Like

More From Author