அஜித் படத்தின் கதைக்களம் என்ன? சிறுத்தை சிவா கொடுத்த பதில்  

Estimated read time 0 min read

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிப்பில் வெளியான கங்குவா திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் வெளியாகி, வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் பெரும் பின்னடைவை சந்தித்தது.
குறிப்பாக, சமூக வலைதளங்களில் இயக்குனர் சிவா கடுமையான விமர்சனங்களுக்கும் கேலிகளுக்கும் உள்ளானார்.
இந்த சூழலில், தனது அடுத்த திரைப்படத்திற்காக மீண்டும் நடிகர் அஜித்துடன் அவர் இணையவுள்ளது கோலிவுட் வட்டாரத்தில் பேசுபொருளாகியுள்ளது.
வீரம், வேதாளம், விவேகம் மற்றும் விஸ்வாசம் என நடிகர் அஜித்துடன் ஏற்கனவே நான்கு வெற்றிப் படங்களைக் கொடுத்துள்ள சிவா, ஐந்தாவது முறையாக அவருடன் கை கோர்க்கிறார்.

Please follow and like us:

You May Also Like

More From Author