சீன ஊடக குழுமத்தின் 2026ஆம் ஆண்டு வசந்த விழா கலை நிகழ்ச்சி 16ஆம் நாள் இரவு 8 மணிக்கு, 10 தொலைக்காட்சி சேனல்கள், 9 வானொலி அதிர்வெண்கள் மற்றும் அதன் சொந்த 6 புதிய ஊடக தளங்களில் ஒரே நேரத்தில் நேரலை செய்யப்பட உள்ளது.
சிஜிடிஏன் சேர்ந்த 85 மொழிகளிலான சர்வதேச தொடர்பு தளங்கள், உலகளவில் 200க்கும் மேற்பட்ட நாடுகள் மற்றும் பிரதேசங்களைச் சேர்ந்த 3,500க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்களுடன் இணைந்து, இக்கலை நிகழ்ச்சி குறித்த நேரலை மற்றும் செய்திகளை வழங்க உள்ளன.
ஆசிய-பசிபிக் ஒளிபரப்பு ஒன்றியம், லத்தீன் அமெரிக்க செய்தி ஒன்றியம், ஐரோப்பிய செய்தி பரிமாற்ற ஒன்றியம் உள்ளிட்ட 7 முக்கிய செய்தி ஒன்றியங்களுடன் சீன ஊடக குழுமம் இணைந்து, இக்கலை நிகழ்ச்சியை உலகளாவிய பார்வையாளர்களுக்கு அறிமுகப்படுத்த உள்ளது. இந்த ஒன்றியங்களைச் சேர்ந்த 181 நாடுகள் மற்றும் பிரதேசங்களில் உள்ள 400க்கும் மேற்பட்ட ஊடக நிறுவனங்கள் மூலம், சிறந்த கலை நிகழ்ச்சிகள் ஒளிபரப்பப்பட உள்ளன.
