லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் ‘கூலி’ திரைப்படத்தின் சமீபத்திய டைட்டில் ரிவீல் வீடியோவிற்கு இளையராஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
‘கூலி’ படத்தின் டைட்டில் டீசரில் தன்னுடைய இசை உரிய அனுமதியின்றி பயன்படுத்தப்பட்டிருப்பதாக அப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான சன் பிக்சர்ஸ்-க்கு அவர் தற்போது நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
லோகேஷ் கனகராஜ் தன்னுடைய படங்களில் பொதுவாக வின்டேஜ் பாடல்களை பயன்படுத்துவது வழக்கம்.
அந்த வகையில் ‘கூலி’ திரைப்படத்தில், நினைத்தாலே இனிக்கும் திரைப்படத்திலிருந்தும், தங்க மகன் திரைப்படத்திலிருந்தும், எங்க ஊரு பாட்டுக்காரன் உள்ளிட்ட படங்களின் பிரபல பாடல்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
குறிப்பாக, ‘டிஸ்கோ’ பாடல் டீஸர் முழுவதும் பயன்படுத்தப்பட்டது.