தாயுமானவர் திட்டம் வயது வரம்பு 60 ஆக குறைப்பு..!

Estimated read time 1 min read

வீடு தேடி ரேஷன் மாருட்களை வழங்கும “தாயுமானவர் திட்டம்” நிறுத்தப்படாது என்று மாறாக இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றும் உணவுத்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மேலுட இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயது வரம்பை 65-லிருந்த 60 ஆகக் குறைக்க அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

முதல்-அமைச்சரின் தாயுமானவர் திட்டத்தின் கீழ் 65 வயதிற்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுதிறனாளிகளின் இல்லத்திற்கே சென்று பொது விநியோகத்திட்ட பொருட்கள் விநியோகம் செய்யப்பட்டு வருகின்றன. சமூகத்தில் மிகவும் நலிவடைந்த பிரிவினராக இருக்கக்கூடிய வயது முதிர்ந்த முதியவர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளின் துயர் துடைக்கும் நோக்கில் இத்திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது.இதன் கீழ், தகுதிவாய்ந்த குடும்ப அட்டைதாரர்களின் இல்லங்களுக்கே நேரடியாகச் சென்று அரிசி, சர்க்கரை மற்றும் இதர அத்தியாவசியக் குடிமைப் பொருட்களை ரேஷன் கடை ஊழியர்கள் விநியோகம் செய்து வருகின்றனர்.

பொது விநியோகத் திட்டத்தின் மூலம் வழங்கப்படும் ரேஷன் பொருட்களை வாங்குவதற்கு முதியவர்களும், மாற்றுத்திறனாளிகளும் நியாயவிலைக் கடைகளுக்கு நேரில் வந்து நீண்ட வரிசையில் காத்திருந்து வாங்குவதில் உள்ள நடைமுறைச் சிரமங்களை முழுமையாகக் களையும் பொருட்டு இந்த உன்னதமான திட்டம் அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது.

இந்நிலையில் இந்த திட்டத்திற்கான ஒர் முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.மாற்றுத்திறனாளிகள் மற்றும் முதியோர்களுக்கு வீடு தேடிச் சென்று ரேஷன் பொருட்களை வழங்கும் தாயுமானவர் திட்டம் நிறுத்தப்படாது என்றும், மாறாக இத்திட்டம் விரைவில் விரிவுபடுத்தப்படவுள்ளது என்றும் உணவுத்துறை அதிகாரப்பூர்வமாக விளக்கம் அளித்துள்ளது. மேலும், பயனாளிகளின் நலனைக் கருத்தில் கொண்டு, இத்திட்டத்தின் கீழ் பயன்பெறுவதற்கான வயது வரம்பை 65-லிருந்து 60 ஆகக் குறைக்க அரசு அதிரடி முடிவு எடுத்துள்ளது.

ரேஷன் கடைகளுக்கு நேரடியாக வர இயலாத நலிவடைந்த பிரிவினருக்கு உதவும் வகையில் இத்திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், இச்சேவை நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாகப் பரவிய வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில், நடப்பாண்டில் இத்திட்டத்தை மேலும் வலுப்படுத்த அரசு திட்டமிட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

வயது வரம்பு 60 ஆகக் குறைக்கப்பட்டதன் மூலம், தமிழ்நாட்டில் உள்ள மேலும் பல லட்சக்கணக்கான முதியவர்கள் இனி தங்களது இல்லங்களிலேயே தடையின்றி ரேஷன் பொருட்களை பெற்றுக்கொள்ள முடியும்.

You May Also Like

More From Author