பழமுதிர்சோலை முருகன் கோயில் கும்பாபிஷேகம் – திரளான பக்தர்கள் பங்கேற்பு!

Estimated read time 0 min read

பிரசித்தி பெற்ற பழமுதிர்சோலை முருகன் கோயிலில் கும்பாபிஷேக விழா வெகு விமிரிசையாக நடைபெற்றது.

மதுரை மாவட்டம் பழமுதிர்சோலையில் உள்ள முருகப்பெருமான் கோயிலில் நடைபெற்ற புனரமைப்பு பணிகள் அண்மைகள் நிறைவடைந்தன.

இந்தநிலையில் கடந்த ஒன்றாம் தேதி கோயிலில் யாகசாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக விழா தொடங்கியது. இன்று நடைபெற்ற கும்பாபிஷேக விழாவில், சிவச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க கோயில் கோபுர கலசங்களுக்கு புனித நீர் தெளிக்கப்பட்டது.

இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று அரோகரா. அரோகரா என விண்ணதிர பக்தி முழக்கம் எழுப்பினர். இதனிடையே பக்தர்களின் வசதிக்காக ஆங்காங்கே எல்இடி திரைகள் அமைக்கப்பட்டு கும்பாபிஷேக விழா ஒளிபரப்பு செய்யப்பட்டது.

You May Also Like

More From Author