கொழும்பில் கடந்த ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற டி20 உலகக் கோப்பை லீக் ஆட்டத்தில், பாகிஸ்தானை 61 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இந்திய அணி கெத்தாக சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளது.
இஷான் கிஷனின் அதிரடி 77 ரன்கள் மற்றும் பந்துவீச்சாளர்களின் துல்லியமான தாக்குதலால் இந்தியா 175 ரன்கள் குவித்ததுடன், பாகிஸ்தானை 114 ரன்களில் சுருட்டியது.
இந்தியாவிடம் தோற்றதால் பாகிஸ்தான் அணி தற்போது நெருக்கடியில் உள்ளது.
இன்று கொழும்பு சிங்கள ஸ்போர்ட்ஸ் கிளப் மைதானத்தில் நடைபெறவுள்ள நமீபியாவுக்கு எதிரான ஆட்டத்தில் பாகிஸ்தான் கட்டாயம் வெற்றி பெற வேண்டும்.
ஒருவேளை மழையாலோ அல்லது தோல்வியாலோ பாகிஸ்தான் புள்ளிகளை இழந்தால், அவர்கள் தொடரிலிருந்து வெளியேறுவார்கள்.
அப்படி நடந்தால், அமெரிக்க அணி (USA) அடுத்த சுற்றுக்கு முன்னேறும்.
இந்தியா – பாகிஸ்தான் மீண்டும் மோதுமா? சூப்பர் 8 சுற்றில் காத்திருக்கும் ‘செக்’
