இந்திய கால்பந்து வரலாற்றில் முன்னெப்போதும் இல்லாத வகையில், 5 முறை உலகக் கோப்பை சாம்பியனான பிரேசில் தேசிய அணி, இந்திய அணிக்கு எதிரான சர்வதேச நட்பு ரீதியிலான போட்டியில் விளையாட உள்ளது.
இப்போட்டி வரும் அக்டோபர் 3-ம் தேதி கொல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற விவேகானந்தா யுவபாரதி கிரீடங்கன் மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இத்தகவலை பிரேசில் கால்பந்து கூட்டமைப்பும் (CBF) மற்றும் அகில இந்திய கால்பந்து கூட்டமைப்பும் (AIFF) அதிகாரப்பூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளன.
பிரேசில் ஆண்கள் மூத்த கால்பந்து அணி இந்திய மண்ணில் கால் பதித்து விளையாடுவது இதுவே முதல் முறையாகும்.
இந்திய கிரிக்கெட்டை தொடர்ந்து கால்பந்திலும் மெகா மோதல்: கொல்கத்தாவில் இந்தியா – பிரேசில் மோதும் வரலாற்றுப் போட்டி
