இந்தியா vs இங்கிலாந்து இடையே இங்கிலாந்தில் நடைபெறும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் கிரிக்கெட் தொடர் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி என அதிகாரப்பூர்வமாக மறுபெயரிடப்பட்டுள்ளது.
இது கிரிக்கெட் ஐகான்களான சச்சின் டெண்டுல்கர் மற்றும் ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோரின் மகத்தான பங்களிப்புகளைக் கொண்டாடும் வகையில் உள்ளது.
இந்த அறிவிப்பு கிரிக்கெட் வரலாற்றில் ஒரு குறிப்பிடத்தக்க தருணத்தைக் குறிக்கிறது. முன்னர் இது பட்டோடி டிராபி என 2007 முதல் அழைக்கப்பட்டு வந்தது.
அதே நேரம், இந்தியாவில் நடைபெறும் இந்தியா vs இங்கிலாந்து டெஸ்ட் தொடர் அந்தோணி டி மெல்லோ டிராபி என்ற பெயரில் 1951 முதல் விளையாடப்படுவது குறிப்பிடத்தக்கது.
டெஸ்ட் சாம்பியன்ஷிப் இறுதிப்போட்டியில் டெண்டுல்கர்-ஆண்டர்சன் டிராபி வெளியிடப்படுகிறது
