சீன ஊடக குழுமத்தின் 2026 வசந்த விழா கலை நிகழ்ச்சியில் சீனா தயாரித்த மனித உருவ ரோபோக்கள் வழங்கிய அற்புதமான அரங்கேற்றம், உலகளவில் பெரும் கவனத்தை ஈர்த்ததோடு வரவேற்பு மற்றும் பாராட்டுகளையும் பெற்றுள்ளது.
2025ஆம் ஆண்டின் வசந்த விழா கலை நிகழ்ச்சியில் மனித உருவ ரோபோக்கள் ஆடிய யாங்கோ நடனம் தனித்துவமான பாணியுடன் இணையத்தில் பிரபலமடைந்து பெரும் வெற்றியாக விளங்கியது. 2026இல், புதிய நுட்பங்களுடன் சிக்கலான செயல்களை அரங்கேற்றிய புதிய ரோபோக்களின் நிகழ்ச்சி, மேலும் பெரும் பாராட்டுகளைப் பெற்றுள்ளது.
அறிவியல் தொழில்நுட்பத் துறை சார்ந்த சைபர்ரோபோ எனும் இணையப் பக்கம், இந்த மனித உருவ ரோபோக்களின் வூஷு நிகழ்ச்சியைப் பகிர்ந்து, இது முற்றிலும் ஆச்சரியமாய் அமைந்தது என்று பதிவு செய்தது.
இந்த ரோபோக்களின் அரங்கேற்றம், பிரிட்டன், அமெரிக்கா, ஸ்பெயின், இந்தியா உள்ளிட்ட பல நாடுகளிலுள்ள முக்கிய ஊடகங்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. இந்திய டுடே வெளியிட்ட தகவலில், சீனாவின் வருடாந்திர வசந்த விழா கலை நிகழ்ச்சி உலகளாவிய அறிவியல் தொழில்நுட்ப விருந்தாக மாறியுள்ளது. மனித உருவ ரோபோக்கள் சிக்கலான அசைவுடன் வூஷு நிகழ்ச்சியை வழங்கின. முன்கண்டிராத இந்த நிகழ்ச்சி, ரோபோட்டிஸ்ஸ் மற்றும் ஏஐ துறையில் சீனாவின் விரைவான வளர்ச்சியை வெளிப்படுத்துகிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சீனாவில் நுண்ணறிவு தயாரிப்பு துறையின் முக்கிய வளர்ச்சி தடங்கள் வசந்த விழா கலை நிகழ்ச்சியின் அரங்கில் பதிவு செய்யப்பட்டுள்ளன. சீனாவின் ரோபோட்டிஸ்ஸ் தொழில், இந்த கலை நிகழ்ச்சியை ஜன்னலாகக் கொண்டு, உலகிற்குத் தனது புத்தாக்க திறன் மற்றும் இயக்காற்றலை வெளிக்காட்டுகிறது.
