சீன நுகர்வுச் சந்தையின் புதிய தோற்றத்துடன் வெளிநாட்டு நிறுவனங்களுக்குப் புதிய வளர்ச்சி வாய்ப்புகள்

Estimated read time 0 min read

18ஆம் நாள் நிறைவடைந்த 6ஆவது சீனச் சர்வதேச நுகர்வுப் பொருட்காட்சி, சீனாவின் 15ஆவது ஐந்தாண்டு திட்டத்தின் துவக்க காலத்தில் நடைபெற்ற முதலாவது பெரிய கண்காட்சியாகும். ஹாய்நான் தாராள வர்த்தக துறைமுகம் சுத‌‌ந்‌திரமான சுங்க நடவடிக்கையை மேற்கொண்டதையடுத்து, ஹாய்நான் தீவில் நடைபெற்ற முதலாவது நிகழ்ச்சியுமாகும். நடப்பு பொருட்காட்சியில் சிறப்பம்சங்களும் சாதனைகளும் அதிகம். அதில் காட்சிக்கு வைக்கப்பட்ட பொருட்களில் 65விழுக்காடு சர்வதேச பொருட்களாகும். கடந்த ஆண்டில் இருந்ததை விட, 20விழுக்காடு அதிகரித்துள்ளது. மேலும், வெளியிடப்பட்ட புதிய உற்பத்திப் பொருட்களின் எண்ணிக்கை 277யை எட்டி கடந்த ஆண்டை விட, ஒரு மடங்கு அதிகரித்துள்ளது.

புதிய தோற்றத்துடன் வெளிக்காட்டிய சீன நுகர்வுச் சந்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு மேலும் அதிகமான புதிய வாய்ப்புகளைக் கொண்டு வரும். முதலாவது, சீன மக்களின் வாழ்க்கைத் தர மேம்பாட்டால், சந்தை மேலும் விரிவாக்கியுள்ளது. அதோடு, புதுமை மீதான சீன மக்களின் தேவையும் நிறுவனங்களின் புத்தாக்கத்தைத் தூண்டியுள்ளது. சீனா அதன் கதவை மேலும் திறந்து சீனாவுக்குள் நுழையும் நிபந்தனைகளை மேலும் குறைத்துள்ளதோடு, வெளிநாட்டு நிறுவனங்கள் ஒன்றையடுத்து புதிய வளர்ச்சிக்கான வாய்ப்புகளைப் பெற்றுள்ளன.

15ஆம் நாளன்று, 139ஆவது சீன ஏற்றுமதி மற்றும் இறக்குமதிப் பொருட்காட்சி குவாங்சோ நகரில் துவங்கியது. பொருட்காட்சிகள் அடுத்தடுத்து நடைபெற்றன. சீனாவின் திறப்புக் கதவும் மேலும் விரிவாக்கப்பட்டுள்ளது. சீனப் பாணி நவீனமயமாக்கலின் முக்கிய பங்களிப்பாளரான வெளிநாட்டு முதலீட்டு நிறுவனங்கள் சீனாவுடன் மேலும் அருமையான எதிர்காலத்தைக் கூட்டாகப் படைக்கும்.

Please follow and like us:

You May Also Like

More From Author