2026ஆம் ஆண்டு சீன ஊடக குழுமத்தின் வசந்த விழா கலை நிகழ்ச்சி நிறைவடைந்த பிறகு, இக்கலை நிகழ்ச்சி நடைபெற்ற நான்கு துணை நகரங்கள் பிரபலமாகியுள்ளன. தரவுகளின்படி, இணையத்தில் இந்த நான்கு நகரங்கள் பற்றிய தேடுதல் இரட்டிப்பாகியுள்ளது. மேலும், வசந்த விழா விடுமுறையின் போது, இந்த நகரங்களுக்கு வருகை தரும் சுற்றுலா பயணிகளுக்காக பல்வேறு கலாச்சார மற்றும் சுற்றுலா நடவடிக்கைகள் நடத்தப்படுகின்றன.
வசந்த விழா கலை நிகழ்ச்சி நடைபெறும் என நான்கு துணை நகரங்கள் அறிவிக்கப்பட்ட பிறகு, ஹெய்லோங்ஜியாங் மாகாணத்தின் ஹார்பின் நகரில் வெளிநாட்டு பயணிகளின் எண்ணிக்கை நூறு மடங்குக்கும் மேலாக அதிகரித்துள்ளது. இந்நகரம் வசந்த விழாவின் போது வெளிநாட்டவருக்கான மிகவும் பிரபலமான 10 சுற்றுலா நகரங்களில் ஒன்றாக மாறியுள்ளது.
பிப்ரவரி 19ஆம் நாள் முதல், யீவூ பொருட்கள் சந்தையின் 2026ஆம் ஆண்டு வசந்த விழாவுக்கான சிறப்பு சந்தை ஜெஜியாங் மாகாணத்தின் யீவூ நகரில் 11 நாட்கள் நடைபெறுகிறது. மேலும், 2 கோடி யுவான் மதிப்புள்ள 5 லட்சம் நுகர்வு கூப்பன்களை இந்நகரம் வெளியிட திட்டமிட்டுள்ளது.
வசந்த விழா கலை நிகழ்ச்சியை தொடர்ந்து ஹெஃபெய் நகரில் பயணம் என்ற நடவடிக்கைக்காக, அரசு மற்றும் நிறுவனங்களுடன் இணைந்து, 3 கோடி யுவான் மதிப்புள்ள கலாச்சார மற்றும் சுற்றுலா நுகர்வுக்கான மானியத்தை ஆன்குய் மாகாணத்தின் ஹெஃபெய் நகரம் வழங்குகிறது.
மேலும், சிச்சுவான் மாகாணத்தின் யிபின் நகரம் வசந்த விழா கலை நிகழ்ச்சிக்கு இணங்க புகைப்படம் எடுப்பது என்ற நடவடிக்கையையும், சுற்றுலாவுக்கான சாதகமான கொள்கைகளையும் வெளியிட்டுள்ளது. இந்த நடவடிக்கை பிப்ரவரி 17ஆம் நாள் முதல் மே 5ஆம் நாள் வரை நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
