சீனத் தலைமை அமைச்சர் லீச்சியாங்கின் அழைப்பை ஏற்று, ஸ்பெயின் தலைமை அமைச்சர் பெட்ரோ சன்செஸ் ஏப்ரல் 10, 11 ஆகிய நாட்களில் சீனாவில் பயணம் மேற்கொள்ளவுள்ளார்.
இது குறித்து சீன வெளியுறவு அமைச்சகத்தின் செய்தித்தொடர்பாளர் லின் ஜியேன் 8ம் நாள் கூறுகையில், கடந்த 3 ஆண்டுகளில் சன்செஸ்ஸின் 3வது சீனப் பயணம் இதுவாகும்.
இப்பயணத்தின் போது, அரசுத் தலைவர் ஷிச்சின்பிங், சன்செஸைச் சந்தித்துரையாடவுள்ளார். தலைமை அமைச்சர் லீச்சியாங்கும் சன்செஸுடன் பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார் என்று தெரிவித்தார்.
ஸ்பெயின், ஐரோப்பிய ஒன்றியத்தில் சீனாவின் முக்கிய ஒத்துழைப்பு கூட்டாளியாகும். இரு தரப்பின் உறவு, சீன-ஐரோப்பிய நாடுகளின் உறவுகளின் முன்னணியில் உள்ளது.
இவ்வாண்டு, சீன-ஸ்பெயின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு நிறுவப்பட்ட 20ம் ஆண்டு நிறைவாகும். இப்பயணத்தை வாய்ப்பாகக் கொண்டு, இரு நாட்டின் பன்முக நெடுநோக்கு கூட்டாளியுறவு, புதிய துவக்கப் புள்ளியில் மேலதிக வளர்ச்சியைப் பெறுவதைத் தூண்ட சீனா விரும்புகிறது என்றும் லின் ஜியேன் கூறினார்.