2026 உலக இணைய மாநாட்டின் வூசென் உச்சிமாநாடு நவம்பர் 3ஆம் நாள், ட்சேஜியாங் மாநிலத்தின் வூசெனில் துவங்கியது.
உலகளாவிய பல நாடுகளின் அரசங்கங்கள், சர்வதேச அமைப்புகள், தொழில் நிறுவனங்களைச் சேர்ந்தவர்கள், நிபுணர்கள், அறிஞர்கள் உள்பட பலர் இதில் கலந்துகொள்கின்றனர்.
மேலும், இதில் கலந்துகொள்வர்கள் புத்தாக்கம் மற்றும் வளர்ச்சி, பாதுகாப்பு மேலாண்மை, நாகரிகப் பரிமாற்றம், சர்வதேச ஒத்துழைப்புகள் குறித்து இதில் கலந்துகொண்டோர் விவாதம் நடத்த உள்ளனர்.
துவக்க விழாவைத் தவிர, செயற்கை நுண்ணறிவு வூசென் கருத்தரங்கு தொடர் வாய்ந்த முக்கிய கருத்தரங்கு, 27 கிளை கருத்தரங்குகள் உள்பட பல நடவடிக்கைகள் நடைபெறுகின்றன.
மேலும், உலக இணைய மாநாட்டின் “முன்னணியில் அறிவியல் தொழில் நுட்ப விருதுகளுக்காக” 43 நாடுகள் மற்றும் பிராந்தியங்களைச் சேர்ந்த 430 வகை அறிவியல் தொழில் நுட்பச் சாதனைகள் சமர்பிக்கப்பட்டுள்ளன. இறுதியில் 20 விருதுகள் தேர்ந்தெடுக்கப்பட்டு வழங்கப்படும்.
