உலகளவில் பிரபலமாகி வரும் சீனப் புத்தாண்டுக் கொண்டாட்டம்

Estimated read time 1 min read

சீனப் பாரம்பரிய நாட்காட்டியின் படி, குதிரை ஆண்டை வரவேற்கும் வகையில், சீன ஊடக குழுமம் ஏற்பாடு செய்த 2026 வசந்த விழாக் கொண்டாட்ட கலை நிகழ்ச்சியில் உலகளவிலுள்ள சீனர்களுக்கும் வெளிநாட்டு ரசிகர்களுக்கும் இனிய சீனப் புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவிக்கப்பட்டது. இந்த சிறப்பு கலை நிகழ்ச்சி, வசந்த விழா மற்றும் சீனக் கலாசாரம் ஆகியவற்றின் வசீகரத்தை உலகிற்கு எடுத்துக்காட்டுகிறது.

சீன தேசத்தின் மிக முக்கியமான பாரம்பரிய விழாவாக விளங்கும் வசந்த விழாவின் வரலாற்று மற்றும் கலாசார மதிப்பு, பன்னாட்டுச் சமூகத்தில் அங்கீகாரம் பெற்று வருகிறது. புத்தாண்டின் தொடக்கத்தில் அனைத்தும் புதிய தோற்றத்துடன் காணப்படும் வசந்த விழா, குடும்பத்தினர் ஒன்றுகூடி, நல்லிணக்கமாக வாழ்வது போன்ற கருத்துக்களைப் பரப்பி வருகிறது.

கடந்த சில ஆண்டுகளில், சீனாவுக்கும் பிற நாடுகளுக்கும் இடையேயான தொடர்புகளும், சீன நாகரிகத்துக்கும் வெளிநாட்டு நாகரிகங்களுக்கும் இடையேயான பரிமாற்றமும் அதிகரித்து வரும் பின்னணியில், சீனக் கலாசாரம் மேலும் அதிகளவில் பிரபலமாகி வருகிறது. குறிப்பாக, உயர் தொழில்நுட்பங்களின் உதவியுடன், சீனக் கலாச்சாரங்களை எடுத்துக்காட்டும் திறன் வெகுவாக மேம்படுத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டவர்களுக்கு மத்தியில், சீனாவின் சிறந்த பாரம்பரிய கலாச்சாரங்களை அறிந்து கொள்ளும் ஆர்வம் அதிகரித்துள்ளது. இது, சீனா மற்றும் சீன கலாச்சாரத்தின்  பிரபலத்திற்கு வாய்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025ஆம் ஆண்டு ஜுலை திங்கள், பியூ ஆராய்ச்சி மையம் வெளியிட்ட ஓர் உலகளாவிய கருத்துக் கணிப்பில், சீனா மீதான உலகளாவிய பொது மக்களின் நேர்மறையான கருத்து 6 ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு புதிய உச்சத்தை எட்டியது. மேலும், இந்த கருத்துக் கணிப்பில் உள்ள 15 நாடுகளின் நேர்மறையான கருத்து முன்பை இருந்ததைக் காட்டிலும் உயர்ந்துள்ளது.

விசா இல்லாத நுழைவு அனுமதிக் கொள்கையை நடைமுறைக்கு கொண்டு வருவதுடன், சமீபத்திய ஆண்டுகளில் அதிக வெளிநாட்டு மக்கள், சீனாவில் சுற்றுலா பயணம் மேற்கொண்டு, சீனா மற்றும் சீனக் கலாச்சாரத்தை அனுபவித்துள்ளனர். இது,  பிற நாடுகள் சீனாவை முழுமையாகப் புரிந்து கொள்வதில் ஆக்கப்பூர்வமாக பங்காற்றி வருகிறது.

Please follow and like us:

You May Also Like

More From Author