“வாயடைத்துப் போனேன்!” தண்ணீர் குழாய் சரி செய்ய ₹32 கோடி தங்கக்கட்டிகள்.. மர்ம நபரின் அசுர நன்கொடை..!! 

Estimated read time 0 min read

ஜப்பானின் ஒசாகா நகரில் உள்ள பழைய தண்ணீர் குழாய்களைச் சீரமைக்க உதவுவதற்காக, அடையாளம் தெரியாத நபர் ஒருவர் சுமார் ₹32 கோடி மதிப்புள்ள தங்கக் கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளார்.

கடந்த நவம்பர் மாதம் இந்த அரிய நன்கொடை கிடைத்ததாகத் தெரிவித்துள்ள அந்நகர மேயர் ஹிடேயுகி யோகோயாமா, இவ்வளவு பெரிய தொகையை எதிர்பார்க்கவில்லை என்றும், இதைக் கண்டு தான் மிரண்டு போனதாகவும் நெகிழ்ச்சியுடன் கூறியுள்ளார்.

மக்கள் நலனுக்காக ஒரு மர்ம நபர் இத்தனை கோடி மதிப்பிலான தங்கத்தை வாரி வழங்கியிருக்கும் இந்தச் சம்பவம் தற்போது சர்வதேச அளவில் பேசுபொருளாகியுள்ளது.

Please follow and like us:

You May Also Like

More From Author