ஈரானுக்கு ஆயுதம் கொடுத்தால் 50% வரி! ட்ரம்ப்பின் அடுத்த அதிரடி மிரட்டல்  

Estimated read time 1 min read

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவத் தளவாடங்களை வழங்கும் நாடுகள் மீது உடனடியாக 50% கூடுதல் வரி விதிக்கப்படும் என்று அதிரடியாக எச்சரித்துள்ளார்.
அதே நேரத்தில், ஈரானில் ஒரு “ஆக்கபூர்வமான ஆட்சி மாற்றம்” ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டு, புதிய ராஜதந்திர நகர்வுகளையும் அவர் முன்னெடுத்துள்ளார்.
தனது ‘ட்ரூத் சோஷியல்’ தளத்தில் பதிவிட்டுள்ள அதிபர் ட்ரம்ப், ஈரானுக்கு ராணுவ ரீதியாக உதவும் நாடுகளுக்கு கடுமையான பொருளாதார நெருக்கடி அளிக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதன்படி, ஈரானுக்கு ஆயுதங்களை வழங்கும் எந்தவொரு நாடும், அமெரிக்காவிற்கு ஏற்றுமதி செய்யும் அனைத்துப் பொருட்கள் மீதும் உடனடியாக 50% வரி செலுத்த வேண்டியிருக்கும். இதில் எந்தவிதமான விதிவிலக்குகளும் (Exemptions) அளிக்கப்படாது என்று அவர் திட்டவட்டமாகக் கூறியுள்ளார்.

You May Also Like

More From Author