நெல்லையில் கூட்டமே இல்லாமல் காலியாக கிடந்த சேர்களுடன் பாஜக சிறுபான்மையினர் மாநில மாநாடு நடைபெற்றது.
தமிழ்நாடு பாஜக சிறுபான்மையினர் அணியின் மாநில மாநாடு நெல்லை உடையார் பட்டியில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு சிறுபான்மையினர் அணி மாநில தலைவர் கோவை ஜான்சன் தலைமை தாங்கினார்.
மாநில பொதுச் செயலாளர் ஏ பி முருகானந்தம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 2,000 பேர் இந்த மாநாட்டில் பங்கேற்பார்கள் என அக்கட்சியினர் மத்தியில் அறிவிக்கப்பட்டு மாநாடு நடைபெற்ற இடத்தில் 2,000 இருக்கைகளும் போடப்பட்டது.
கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் நேற்று காலை நெல்லையில் இருந்து அவசர வேலை காரணமாக ரயில் மூலமாக திருச்சி புறப்பட்டு சென்றார். அதனால் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நெல்லையில் இல்ல என்ற தகவலை தெரிந்து கொண்ட கட்சி நிர்வாகிகள் இந்த மாநில மாநாட்டில் பங்கேற்க ஆர்வம் காட்டவில்லை.
அதுமட்டுமில்லாமல் மாநில தலைவர் உட்பட முக்கிய பிரமுகர்கள் யாருமே இந்த மாநாட்டில் பங்கேற்காததால் கட்சித் தொண்டர்களும் மாநாட்டில் பங்கேற்பதற்கு அதிக அளவில் வரவில்லை. இதனால் மேடையில் மட்டுமே பாஜக தலைவர்கள் அமர்ந்திருந்த நிலையில் மாநாட்டில் அமைக்கப்பட்டு இருந்த இருக்கைகள் அனைத்துமே காலியாக கிடந்தன.
மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரனின் சொந்த தொகுதியில் நடைபெற்ற பாஜக சிறுபான்மையினர் மாநாட்டில் நிர்வாகிகள் கலந்து கொள்ளாமல் காலியாக கிடந்த சேர்களால் தற்போது பேசும் பொருளாக மாறி இருக்கிறது.
