சீன அரசுத் தலைவர் ஷிச்சின்பிங் நவம்பர் 26ஆம் நாள் பெய்ஜிங்கில் சிங்கப்பூர் அரசுத் தலைவர் லீ சியென் லூங்கைச் சந்தித்துப் பேசினார்.
சீனாவின் எதிர்காலத்தின் மீதான தனது நம்பிக்கையை லீ சியென் லூங் மீண்டும் வலியுறுத்தினார். திறப்பு மற்றும் ஒத்துழைப்பை முன்னேற்றுவது, உலகின் அமைதி மற்றும் வளர்ச்சியை மேம்படுத்துவது ஆகியவை குறித்து லீ சியான் லூங் சீனாவைப் பொருத்தமான மதிப்பீடு செய்து, சீனாவைப் பழிவாங்கும் கூறுகளை மறுத்துள்ளார்.
சீனாவுடனான ஒத்துழைப்பின் வெற்றிகரமான அனுபவத்திலிருந்து மட்டுமல்லாமல், சீனாவின் சமூக மற்றும் பொருளாதார வளர்ச்சிப் போக்கு குறித்த அவரது புறநிலை, பன்முக மற்றும் ஆழமான புரிந்துணர்விலிருந்தும் இது வருகிறது.
அதே வேளையில், பொருளாதாரத்தின உலகமயமாக்கத்தைப் பேணிக்காப்பது, சீர்திருத்தம் மற்றும் வெளிநாட்டுத் திறப்புப் பணி, வெளிநாட்டு ஒத்துழைப்பை முன்னேற்றுவது ஆகியவற்றிலிருந்து ஒரு பெரிய நாடான சீனாவின் பொறுப்பையும் அவர் கண்டார்.
சீனாவின் பரந்த சந்தை மற்றும் வளர்ச்சி உள்ளார்ந்த ஆற்றல் இன்னும் உலகிற்கு நம்பிக்கையளிக்கின்றது. ஒத்துழைப்புடன் கூட்டு வெற்றி பெறுவது என்பது, அனைத்து தரப்பினரின் எதிர்பார்ப்பாகும்.
சீனா எப்போதும் உலகிற்கு நிதானத்தன்மையையும் உறுதியையும் செலுத்தி வருகிறது. கொந்தளிப்பான உலகில் சீனாவின் மீது லீ சியென் லூங் உறுதியான நம்பிக்கை கொள்கின்றார்.
சீனாவின் வளர்ச்சி வாய்ப்பு நன்றாக இருப்பது மட்டுமல்லாமல், உலகின் வளர்ச்சி போக்கைப் பற்றிய புரிந்துணர்வையும் இது காட்டுகிறது.