திலக் வர்மாவை உருவக் கேலி செய்தாரா அர்ஷ்தீப் சிங்? வைரல் வீடியோவால் சர்ச்சை  

Estimated read time 1 min read

பஞ்சாப் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் அர்ஷ்தீப் சிங், மும்பை இந்தியன்ஸ் வீரர் திலக் வர்மாவிற்கு எதிராக இனவெறி அல்லது உருவக் கேலி (Racist Remark) செய்யும் வகையில் பேசியதாக ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அந்த வீடியோவில், திலக் வர்மா நடந்து செல்லும் போது அர்ஷ்தீப் சிங் அவரை “ஓயே அந்தேரே” (கருப்பு நிறத்தை குறிக்கும் வகையில்) என அழைப்பது போலப் பதிவாகியுள்ளது.
மேலும், நமன் தீரைச் சுட்டிக்காட்டி பஞ்சாபி மொழியில், “இதுதான் பஞ்சாபின் உண்மையான பொலிவு, இது போலி” என்று அவர் பேசியிருப்பது ரசிகர்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்த விவகாரத்தில் அர்ஷ்தீப் சிங்கிற்கு எதிராக நெட்டிசன்கள் தற்போது கடும் கண்டனங்களைப் பதிவிட்டு வருகின்றனர்.

You May Also Like

More From Author